அடுத்த படம் செல்வராகவனுடனா? ஜெயம் ரவி பதில்

VM| Last Modified புதன், 6 மார்ச் 2019 (10:52 IST)
இயக்குனர் செல்வராகவன் தற்போது சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை எடுத்துள்ளார். இதில் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி ஆகியோர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. என்ஜிகே அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. விரைவில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.


 
இந்நிலையில் செல்வராகவன் அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து புதிய படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக ஜெயம் ரவி அளித்துள்ள விளக்கத்தில்  முற்றிலும் தவறான செய்தி, செல்வராகவன் இயக்கத்தில் நான் நடிக்கவில்லை என்றார்.
 
ஜெயம் ரவி அடுத்ததாக அவரது அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் கோமாளி என்ற படத்தில் நடிக்க உள்ளார். காஜல் அகர்வால் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இவரை தவிர சம்யுக்தா ஹெக்டே,  கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, கோவை சரளா,ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
 
எல்கேஜி படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கோமாளி படத்தை தயாரிக்கிறது . 


இதில் மேலும் படிக்கவும் :