வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 25 பிப்ரவரி 2019 (18:50 IST)

ஜெயம் ரவியை பெருமைப்படுத்திய மகன் ஆரவ்விற்கு வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் ரசிகர்கள்!

அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் படத்தில் நடித்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம்ரவி.


 
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் அடுத்தடுத்து அறிமுகமாகி தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்கின்றனர். அந்த வகையில் ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜெயம் ரவியின் மகன் ஆரவ். இந்த படத்தில்  அப்பாவுக்கு மகனாக நடித்த ஆரவ் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.


 
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற எடிசன் விருது வழங்கும் விழாவில் ‘டிக் டிக் டிக்’ படத்திற்காக நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்விற்கு சிறந்த அறிமுக குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜெயம் ரவி. இதனை பார்த்த ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.