என்.ஜி.கே சமூகநீதிக்கு எதிரானப் படமா ?– ஆரம்பித்தது குறியீடு சண்டை !
நீண்ட இழுபறிகளிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் என்.ஜி.கே. படத்தில் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் என்.ஜி.கே படம் கடந்த தீபாவளிக்கே வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் சில பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போய் ஒருவழியாக கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து நீண்ட நாட்களாக இந்தப் படத்தைப் பற்றிய அப்டேட்களைக் கேட்டு நச்சரித்துக்கொண்டிருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இன்று காதலை தினததை முன்னிட்டு இந்தப் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
சற்றுமுன்னர் வெளியாகி ரசிகர்களிடம் நல் ஆதரவு பெற்றுவரும் என்.ஜி.கே. டீஸர் கூடவே சில சர்ச்சைகளையும் கூட்டி வந்துள்ளது. என்.ஜி.கே படத்தில் அரசியல் மாற்றத்திற்காக அரசியலில் இறங்கும் ஒரு சமுதாயப் பொறுப்புள்ள இளைஞனாக நந்த கோபாலன் குமரன் எனும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார்.
வெளியாகியுள்ள டீஸரில் சிலக் காட்சித்துணுக்குகளின் மூலம் இது ஒரு இந்துத்துவப் படம் என்றும் திராவிட, இடதுசாரி மற்றும் சமூகநீதி சிந்தனைகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யும் படமாக இருக்கும் என்று குறியீடுகளை வைத்து ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். அரசியலில் இறங்கும் சூர்யா ஊழலை ஒழிக்கப் போராடும் கதைக் களமாக என்.ஜி.கே இருக்குமென டீஸரில் வரும் காட்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் அரசியலில் முதலில் ஒழிக்கப்படவேண்டிய சாதியக் கொடுமைகள் பற்றி டீஸரில் எந்தக் காட்சிகளும் இல்லை. அதற்கு உதாரணமாகக் கீழிருக்கும் புகைப்படத்தை சுட்டிக் காட்டலாம்.
இந்தப் புகைப்படத்தில் உள்ள அரசியல் தலைவர்களில் சமூக நீதிக்காகப் போராடிய பெரியார், அம்பேத்கர், கலைஞர் அண்ணா ஆகியோரின் புகைப்படங்கள் இருட்டில் தெளிவில்லாமலும் மற்ற அரசியல் தலைவர்களின் படங்கள் வெளிச்சத்தில் தெளிவாகவும் உள்ளன.
அடுத்தப் புகைப்படத்தில் படத்தில் முக்கியமானக் காட்சியில் சூர்யா அரசியலில் இறங்குவது குறித்து முடிவெடுக்கும். காட்சியில் பின்னனியில் லோ ஆங்கிளில் எம்.ஜி..ஆரின் புகைப்படம் காட்டப்பட்டுள்ளது. (இது எம்.ஜி.ஆர் திமுக வில் இருந்து பிரிந்து வந்து புதுக்கட்சி ஆரம்பித்ததைக் குறிக்கிறது)
அடுத்தப் படத்தில் க்ளோஸ் அப் ஷாட்டில் சூர்யா ஒரு தீவிர இந்துத்வா வாதியைப் போல நெற்றியில் குங்குமத்தால் வீரத்திலகம் வைத்திருப்பது போலக் காட்டப்பட்டுள்ளது. வடநாட்டில் உள்ள அரசியல் தலைவர்களே அதுவும் இந்து மதத் தலைவர்களே இதுபோல நெற்றியில் குங்குமம் வைப்பது வழக்கம். எனவேப் படம் சமூக நீதியில்லாத ஊழலுக்கு எதிரான இந்துத்துவ அரசியலைப் பேசப் போகிறது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.