பாஜகவை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் காலா - நெட்டிசன்கள் பாராட்டு

Last Modified வெள்ளி, 8 ஜூன் 2018 (11:03 IST)
காலா படத்தில் ஆர்.எஸ்.எஸ், பாஜக, சிவசேனா ஆகியோரை நேரிடையாக எதிர்க்கும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

 
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ரஜினி நடித்த காலா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரஜினி படம் என நினைத்து செல்லும் ரசிகர்களை இப்படம் திருப்தி செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்தாலும், சிவசேனாவை எதிர்க்கும் துணிச்சலாக கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
 
இந்த தேசம் பசுமையானதாகவும், புனிதமாகவும் மாற வேண்டும் என நான் விரும்புகிறேன் என டீசரில் காலா படத்தில் வில்லன் நானாபடேகர் பேசும் வசனம் பிரதமர் மோடி பேசுவது போலவே இருக்கிறது என அப்போதே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில்தான் நேற்று படம் வெளியானது.

 
இப்படத்தில் கொஞ்சமும் சமசரம் செய்து கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ், பாஜக, சிவசேனா ஆகிய அமைப்புகளை ரஞ்சித் ரஜினியின் மூலம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசியுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவெனில், பாஜகவிற்கு ஆதரவானவர் என்ற பிம்பத்தில் இருக்கும் ரஜினி, அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதுதான் சிறப்பு..
 
அதிலும், காக்கி டிரௌசரை கழட்டி விட்ருவோம் என காலா படத்தில் வசனமே வருகிறது. எனவே, ரஜினிக்கு கூஜா தூக்குன காக்கி டிரௌசர்(ஆர்.எஸ்.எஸ்) எல்லாத்தையும் ரஜினி படத்துலயே அம்மணமாக்கி விட்டாரு என ஒருவர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 
அதேபோல், 
 
பாஜக, சிவசேனா, ராமர் - மூனு பேரையும் ஒற்றே அடி - காலா 
 
மிகவும் தரமான சம்பவம். 
 
பா.ரஞ்சித் எனும் கலைஞனின் சமூக, அரசியல் விழிப்பும், ஆதங்கமும் படம் முழுக்க விரவிக்கிடக்கிறது. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான, தைரியமான படத்தில் ஒன்றாக "காலா" இடம் பிடிக்கும்.
 
என மற்றொருவர் பாராட்டியுள்ளார்.

 

 
“ரஜினி பிஜேபியின் கைக்கூலி என கொண்டாடும் சங்கிகளுக்கு ரஜினியை வைத்தே செருப்படி கொடுத்திருக்கிறார் பா.ரஞ்சித் !#காலா செம..நிலமே எங்கள் உரிமை” எனவும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
 
இப்படி காலா படத்தில் ரஜினி மூலம் ரஞ்சித் தனது அரசியலை நேரிடையாக பேசியுள்ளார். ரஜினியும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் நடித்துள்ளார் என பாராட்டி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :