திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 ஜூன் 2018 (06:38 IST)

'காலா'வை ரிலீஸ் செய்ய முடியாது என்று சொல்லவில்லை? கமலா சினிமாஸ் திடீர் பல்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்க சொல்லி விநியோகிஸ்தர்கள் வற்புறுத்துவதாகவும், பொதுமக்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்க விருப்பம் இல்லாததால் 'காலா' படத்தை ரிலீஸ் செய்யவில்லை என்றும், அதற்கு பதிலாக ஜூராஸிக் வேர்ல்டு படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாகவும், கமலா தியேட்டர் நிர்வாகி கூறியதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தது.
 
அதேபோல் தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தின் டுவிட்டரிலும் இதுகுறித்த ஒரு டுவீட் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கமலா சினிமா விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
காலா திரைப்படத்தை நாங்கள் ரிலீஸ் செய்ய முடியாது என்று கூறியதாக மீடியாக்களில் செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதில் சிறிதும் உண்மை இல்லை. ஒருசில காரணங்களால் காலா படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் விநியோகிஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்யவில்லை என்பதுதான் உண்மை. இதனை தவிர வேறு எந்த காரணமும் இல்லை' என்று விளக்கமளித்துள்ளது.