1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. After Kaala Dalit support increased to Rajini

தலித் வாக்குகளுக்காக 'காலா'வில் நடிக்க ரஜினி சம்மதித்தாரா?

ரஜினி
எம்ஜிஆர் காலம் வரை தலித் வாக்குகள் என்றால் மொத்தமாக அதிமுகவுக்குத்தான் விழும். ஆனால் தலித்துகளுக்கு என தனியாக கட்சி ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கு என ஒருசில தலைவர்கள் தோன்றிய பின்னர் தலித் வாக்குகள் பிரிந்தன. இந்த நிலையில் தன் மீது பாஜக முத்திரை அழுத்தமாக பதிந்துள்ளதால் தலித் வாக்குகள் தனக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று கருதியே, அந்த தலித் வாக்குகளை தன்பக்கம் திருப்ப அவர் காலா' படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
 
'காலா' படத்தின் கதையும் கருவும் ரஜினியின் நிஜ கருத்துக்கு எதிரானது. பாஜக எதிர்ப்பு, போராட்டம், யூனிபார்ம் அணிந்த போலீஸ் மீது கைவைப்பது ஆகியவைகள் ரஜினிக்கு பிடிக்காதவை. ஆனால் 'காலா' படத்தில் இவைதான் மெயின் காட்சிகள்.
 
இப்படி தன்னுடைய இமேஜ் டேமேஜ் ஆகும் அளவுக்கு உள்ள ஒரு கதையில் ரஜினி எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற கேள்விக்கான பதிலை அரசியல் வல்லுனர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். தலித்துக்களுக்காக தனி இயக்கம் நடத்தி வரும் கோட்டையை சரிக்கவே இந்த படம் உதவும் என ரஜினி நம்புவதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த டெக்னிக் வேலை செய்திருப்பதாகவும், இந்த படத்தால் ரஜினிக்கு தலித் மக்களிடையே செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது,.
அடுத்த கட்டுரையில்
அந்தரத்தில் பறந்து வந்த பெண்ணின் ஆடை: சவுதி அரேபியாவில் பரபரப்பு