நேர்கொண்ட பார்வை படத்தை குறித்து தயாரிப்பாளர் முக்கிய அறிவிப்பு !
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது
ஏற்கனவே இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 158 நிமிடங்கள் ஓடும் வகையில் ரன்னிங் டைம் பெற்றுள்ளது. அதாவது இரண்டு மணிநேரம் 38 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும். இந்த படத்தின் சென்சார் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை என்ற தயாரித்துள்ள போனி கபூர் படத்தின் தமிழக உரிமை பெற்றவர்கள் யார் என்ற விவரத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.