திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (11:24 IST)

“நான் அமெரிக்க விவசாயி”… பிரபல நடிகர் நெப்போலியன் வெளியிட்ட வீடியோ!

நடிகர் நெப்போலியன் தனது மகனின் உடல்நிலைக்காக இப்போது அமெரிக்காவில் தங்கி வருகிறார்.

இதனால் அவர் தனக்கு வந்த பல வாய்ப்புகளை இழந்துள்ளார். ஆனால் அங்கு சென்று இதுவரை நான்கு ஹாலிவுட் படங்களில் நடித்துமுடித்துள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவுடன் இருக்கும் தொடர்பு விடுபட்டு போய்விட கூடாது என்பதற்காக ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் தமிழில் நடிக்கிறார். அப்படி கடந்த ஆண்டு அவர் கார்த்தி நடிக்கும் சுல்தான் மற்றும் சமீபத்தில் அன்பறிவு ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது அமெரிக்காவில் இருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் தனது இடத்தில் விவசாயும் செய்யும் அவர் அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் “கடவுள் எனும் விவசாயி, கண்டெடுத்த தொழிலாளி விவசாயி” என்ற எம் ஜி ஆர் பாடலையும் பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.