1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (11:58 IST)

சிவகார்த்திகேயனின் “PRINCE” படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்… இணையத்தில் வைரல்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது. படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு லண்டனில் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் லுக் மற்றும் தலைப்பு நேற்று வெளியாகி கவனம் பெற்றது.

அதையடுத்து தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயனோடு நாயகி மரியாவும் இடம்பெற்றுள்ளார்.