1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (18:52 IST)

சிவகார்த்திகேயனை இயக்கும் மடோன் அஸ்வின்… ரகசியமாக நடந்த ஒரு Promo படப்பிடிப்பு?

சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படம் விரைவில் தொடங்க உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அதையடுத்து டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து SK 20 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அதையடுத்து டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து SK 20 என்றழைக்கப்பட்ட ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் படத்துக்கான ப்ரோமோ வீடியோ நேற்று படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் பாணியில் ஒரு ப்ரோமோவோடு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.