வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (09:57 IST)

டான் படத்த இப்பதான் பார்த்தேன்… டிவிட்டரில் விமர்சனம் சொன்ன நடிகர் விமல்

சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் கடந்த மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இதையடுத்து படத்தின் 25 ஆவது நாள் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் ரிலீஸாகி 28 ஆவது நாளான இன்று டான் திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது. திரையரங்குகளில் படத்தைப் பார்க்காதவர்கள் தற்போது நெட்பிளிக்ஸில் பார்த்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும், சிவகார்த்திகேயனோடு கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தவருமான நடிகர் விமல் படத்தை தற்போது பார்த்து பாராட்டியுள்ளார். அதில் “#Don நல்லதொரு entertainment படமாக இருந்தது. நேற்றுதான் @NetflixIndia ல பார்த்தேன். தம்பி @Siva_Kartikeyan க்கு மற்றுமொரு வெற்றி படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. வில்லனை போன்று ஆரம்பித்து ஒரு பொறுப்பான வாத்தியாராக  @iam_SJSuryah சார் அருமை” என டிவீட் செய்துள்ளார்.