1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (15:22 IST)

இது உதயநிதி சொல்லும் குட்டிக்கதை… வெளியானது நெஞ்சுக்கு நீதி ‘நீக்கப்பட்ட காட்சி’

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பரவலாக பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இது இந்தியில் வெளியான ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை அருண் ராஜா காமராஜ் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். படம் வெளியானது முதல் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் சிலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து தற்போது படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த காட்சி இப்போது இணையத்தில் பரவலாக கவனத்தைப் பெற்று வருகிறது.