1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 23 மே 2022 (11:30 IST)

’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யலாம்: தமிழக அமைச்சர்!

nenjkku
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யலாம் என அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியில் ஹிட்டான ஆர்டிகல் 15 என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக்தான் நெஞ்சுக்கு நீதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தை கடந்த சில நாட்களாக திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பார்த்து தங்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழக அமைச்சர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யலாம் என்றும் அந்த அளவுக்கு நல்ல கருத்துள்ள படம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படமே ஹிந்தி ரீமேக் தான் என்பது கூட அவருக்கு தெரியவில்லை என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்