வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 20 மார்ச் 2021 (13:37 IST)

ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் வேட்புமனுக்கள் ஏற்பு!

ஸ்டாலின், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியவர்களின் வேட்புமணுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 12 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர். தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று வரை 7,133 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 6,080 பேரும், பெண்கள் 1,050 பேரும் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.