இனிமேல் பேனர் இல்லை... அசத்திய விஜய் ரசிகர்கள் - பாராட்டிய போலீஸ்!
கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி பள்ளிக்கரணையில் சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் கீழே விழுந்ததால் பின்னால் வந்த லாரி அவரது உடலில் ஏறி நசுங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சமத்துவம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து தமிழக அரசு பேனருக்கு பேன் செய்தது. இந்நிலையில் தற்போது அரசின் சட்டத்தை மதிக்கும் வகையில் விஜய் ரசிகரக்ள் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு ரிலீஸாகவுள்ள பிகில் படத்திற்கு பேனர்கள் , கட் அவுட் எதையும் வைக்காமல் அதற்கு மாறாக நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை காவல்துறை அதிகாரியின் ஆலோசனையின்பேரில் அமைத்து கொடுத்து அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் விஜய் ரசிகர்களை பாராட்டும் வகையில் பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், “பெண்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி அமைத்து கொடுத்த விஜய் நற்பணி மன்ற இயக்கத்திற்கு நன்றி. மேலும் நெல்லை விஜய் ரசிகர்கள் செய்துள்ள இந்த நல்ல காரியத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றனர்” என்று பாராட்டு தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்களின் இந்த நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.