கைதிக்கு கொண்டாட்டம்: சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா பிகில்?

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 22 அக்டோபர் 2019 (15:17 IST)
பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் கே.பி செல்வாவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. 
 
விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியா உள்ள நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
 
இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையின்போது பிகில் படத்தின் இயக்குனர் அட்லி உள்பட படக்குழுவினர் படத்தின் மொத்த கதையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
 
இதன் பின்னர் அட்லி தற்போது வழக்கறிஞர் விளம்பரம் மற்றும் பணம் பறிப்பதற்காக கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக வாதாடப்பட்டது. அதேபோல, இந்த வழக்கை இங்கு விசாரிப்பது நியாமானதல்ல எனவும் வாதத்தின் போது விவாதித்தனர். 
 
இதனையடுத்து உதவி இயக்குனர் செல்வா, வழக்கு தொடர அனுமதி கோரினார். இதை ஏற்று தற்போது பிகில் திரைப்படம் தொடர்பாக உரிமையியல் வழக்குத் தொடர இயக்குநர் செல்வாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் பிகில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

கைதி படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், பிகில் படத்திற்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :