வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (18:21 IST)

பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி: டீலில் விடப்பட்ட கைதி!!

பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமது கோரி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 
 
தீபாவளியை முன்னிட்டு விஜய் நடித்துள்ள ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘கைதி’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. தீபாவளியின்போது மக்கள் பலர் திரையரங்குகளுக்கு படையெடுப்பது அதிகமாகியுள்ளதால் திரையரங்குகள் இந்த படங்களுக்கு சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்து லாபம் பார்க்கலாம் என திட்டமிட்டிருந்தன.
 
ஆனால் சிறப்பு காட்சிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் தீபாவளியன்று பிகில், கைதி உள்ளிட்ட எந்த திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்ய தமிழக அரசு அனுமதி தரவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். 
 
மேலும், சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என்று உறுதியளித்தால் மட்டுமே சிறப்பு காட்சிகள் திரையிடல் குறித்து பரிந்துரை செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமது கோரி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அரசு அனுமதி அளித்தால் மட்டுமே சிறப்பு காட்சி திரைப்படும். இது குறித்து அமைச்சரையும் சந்தித்து பேச உள்ளோம் என தெரிவித்துள்ளார்.