1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2017 (23:40 IST)

நஸ்ரியாவின் ரீஎண்ட்ரி உறுதி! அஞ்சலி மேனன் படத்தில் ஒப்பந்தம்

'ராஜா ராணி', 'திருமணம் என்னும் நிக்காஹ்', 'நய்யாண்டி' உள்பட ஒருசில படங்களில் மட்டுமே நடித்த நஸ்ரியா, நல்ல மார்க்கெட் இருந்த நேரத்தில் திடீரென மலையாள நடிகர் பகத் பாசிலுடன் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார்



 
 
இந்த நிலையில் நஸ்ரியா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் செய்தி கிளம்பி பின்னர் அது வதந்தி என்று நிரூபணம் ஆனது. இந்த நிலையில் விரைவில் ஒரு மலையாள படத்தில் நஸ்ரியா நடிக்கவுள்ளதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி வந்தன
 
இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம், அஞ்சலிமேனன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நஸ்ரியா நடிக்கவுள்ளார். பிரித்விராஜ் ஹீரோவாக நடிக்கவுள்ள இந்த படத்தில் நடிகை பார்வதியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இந்த படம்தமிழிலும் டப் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.