ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2017 (18:35 IST)

அரசியல் படத்தின் மூலம் ரீஎண்ட்ரியாகும் சுரபி.

தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த சுரபி, அரசியல் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார்.
விக்ரம்பிரபு ஜோடியாக ‘இவன் வேற மாதிரி’ படத்தில் அறிமுகமானவர் சுரபி. அதன்பிறகு தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் சிறிய வேடத்திலும், ஜெய் ஜோடியாக ‘புகழ்’ படத்திலும் நடித்தார். ஆனால், எந்தப் படமுமே அவருக்கு கைகொடுக்கவில்லை.

எனவே, தெலுங்குப் பக்கம் ஒதுங்கினார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வர, வெற்றிப்பட நடிகையாகிவிட்டார். அதனால், மறுபடியும் தமிழில் வாய்ப்பு தேடி வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள ‘குறள் 388’ படத்தில், விஷ்ணு மஞ்சு ஜோடியாக நடித்துள்ளார் சுரபி. இந்தப் படம், தெலுங்கில் ‘வோட்டர்’ என்ற பெயரில் வெளியாகிறது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள 388வது குறளை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
 
தேர்தலின்போது போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றும் அரசியல்வாதிகளைப் பற்றிய படம் இது. இதுதவிர, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘அடங்காதே’ படத்திலும் நடித்து வருகிறார் சுரபி.