ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (21:32 IST)

அஜித்தின் அடுத்த படத்தில் ரங்கராஜ் பாண்டே?

தல அஜித் நடிக்கவுள்ள 'தல 59' படத்தின் பூஜை இன்று எளிமையாக படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் நடந்தது. இந்த பூஜை விழாவில் சிறப்பு விருந்தினர் என யாரும் அழைக்கப்படாத நிலையில் இந்த பூஜையில் சமீபத்தில் தந்தி டிவியில் இருந்து விலகிய ரங்கராஜ் பாண்டே கலந்து கொண்டார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

'தல 59' படத்தில் ஏதாவது ஒரு முக்கிய கேரக்டரில் அவர் நடிக்கவுள்ளாரா? அல்லது பூஜைக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை. இருப்பினும் அவர் கலந்து கொண்டது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவியில் இருந்து விலகிய பின்னர் ரஜினி கட்சியில் ரங்கராஜ் பாண்டே சேருவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென படபூஜையில் கலந்து கொண்டதால் இனி அவருடைய பாதை சினிமா பாதையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்