செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (15:26 IST)

பல்லாவரம் குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் பேசிய நடிகர் விஜய்

Vijay
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வாரிசு. இப்படம் உலகம் முழுவதும் வசூல் குவித்துள்ளது. தற்போது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரண்டாம்கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில், சென்னை அடுத்துள்ள பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் விஜய் அங்கில் என்னை பார்க்க வீட்டிற்கு வாங்க என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
vijay

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், இந்த வீடியோவை பார்த்த நடிகர் விஜய், பல்லாவரம் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி அவர்களை மகிழ்வித்துள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.