ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (12:47 IST)

மல்லிப்பூ வெச்சுக்கம்மா.. அழகா இருப்ப! – வெளிநாட்டு டிவி தொகுப்பாளரை அரவணைத்த பூக்கார பாட்டி!

Timeless Tamilnadu
வெளிநாட்டிலிருந்து நிகழ்ச்சி ஒன்றிற்காக வந்த பெண் தொகுப்பாளருக்கு தமிழ்நாட்டு பூக்கார மூதாட்டி பூ வைத்துவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனத்தின் லைப் ஸ்டைல் சேனல் ட்ராவல் எக்ஸ்பி. இந்த சேனலில் அலெக்ஸ் ஒத்வைட் என்பவர் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள மக்களின் வாழ்க்கை, உணவு, கலாச்சாரம் போன்றவற்றை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான இடங்கள், மக்கள், பண்பாடுகள் குறித்து “டைம்லஸ் தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சியை அலெக்ஸ் ஒத்வைட் தொகுத்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஷுட்டிங்கிற்காக கடந்த நவம்பரில் அலெக்ஸ் தமிழ்நாடு வந்துள்ளார்.

அப்போது மார்க்கெட்டில் அவர் சென்றபோது பூக்கார பாட்டி ஒருவர் அவருக்கு பூ வைத்துவிட்டுள்ளார். அந்த வீடியோவை தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அலெக்ஸ் ஒத்வைட், தமிழ்நாட்டின் பல பகுதிகளை சுற்றி பார்த்தது மகிழ்ச்சி அளித்ததாகவும், திட்டமிடாத புதிய நண்பர்கள் தனக்கு கிடைத்தது தனக்கு மறக்கவியலாத அனுபவம் என்றும் கூறி அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

Edit by Prasanth.K