1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2017 (18:03 IST)

சிவகார்த்திகேயனை பொது மேடையில் மிரட்டிய நயன்தாரா!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை நயன்தாரா இருவரும் மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றனர்.


 
 
இந்நிலையில் நயன்தாரா பொது மேடையில் சிவகார்த்திகேயனை மிரட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நயன்தாரா சமீபத்தில் பங்கேற்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸாக கால் செய்து உள்ளார்.
 
அப்போது, நயன்தாராவிடம் ஜாலியாக ஒரு கேள்வி கேளுங்கள் என்று தொகுப்பாளர் சிவகார்த்திகேயனிடம் கூறி உள்ளார்.  
 
உடனே அவரும் நீங்கள் ஏன் நானும் ரவுடி தான் படத்தில் மட்டும் நன்றாக நடித்திருந்தீர்கள் என கேட்டுள்ளார். 
 
இதற்கு நயன்தாரா என்ன சிவகார்த்திகேயன் இன்னும் வேலைக்காரன் படப்பிடிப்பு முடியவில்லை, நியாபகம் இருக்கிறதா? என ஜாலியாக மிரட்டினாராம்.