வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (16:05 IST)

இரண்டு பாகங்களாக வெளியாகிறதா ‘வேலைக்காரன்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’, இரண்டு பாகங்களாக வெளிவரலாம் என்கிறார்கள்.


 

 
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஃபஹத் ஃபாசில், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன், பிரகாஷ் ராஜ், சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபுட்டேஜ், நான்கரை மணி நேரம் இருக்கிறதாம். என்ன செய்வதென்று சில நாட்களாக மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த படக்குழுவினர், சிவகார்த்திகேயன் சொன்ன ஒரு விஷயத்தால் ஷாக் ஆகிவிட்டார்களாம்.

படத்தை இரண்டாகப் பிரித்து, ‘பாகுபலி’ போல இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்பது சிவகார்த்திகேயன் கருத்து. ‘ஒரு படத்துக்கு ஆன செலவை வைத்தே இரண்டு படங்களை ரிலீஸ் பண்ணி கல்லா கட்டிவிடலாம்’ என தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் நினைத்தது தான் இதற்கு காரணம் என்கிறார்கள். எனவே, அடுத்த வருடம் பொங்கலுக்கு முதல் பாகமும், தமிழ் வருடப் பிறப்புக்கு அடுத்த பாகமும் ரிலீஸாகலாம் என்கிறார்கள்.