1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 4 அக்டோபர் 2017 (21:39 IST)

பிரபுதேவா டூ பாசிட்டிவிட்டி: நயன்தாராவின் டாட்டூ ரகசியம்!!

நயன்தாரா தற்போது கதை தேர்வில் மிக கவனமாக செயல்பட்டு வருகிறார். பெரும்பாலும் ஹிரோயின்களுக்கு முக்கியதுவம் அளிக்கும் படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.


 
 
தற்போது உடன் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டுள்ள நயன்தாரா, அவருடைய பிறந்தநாளை அமெரிக்காவில் கொண்டாடினார். 
 
அதோடு விரைவில் நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்யவும் உள்ளார் என செய்திகள் வெளியாகியது. இவை அனைத்தையும் விட நயன்தாராவை பற்றி தற்போது பேசுவதற்கான காரணம் அவர் கையில் உள்ள புது டாட்டூ.
 
இதற்கு முன்னர் தனது முன்னாள் காதலர் பிரபுதேவாவின் பெயரை டாட்டூவாக போட்டிருந்த நயன்தாரா, அதனை தற்போது பாசிட்டிவிட்டி (Positivity) என்று மாற்றியுள்ளார்.
 
பிரபுதேவாவுடன் காதல் முறிவுக்கு பின்னர் நயன்தாராவின் வாழ்க்கை பாசிட்டிவ்வாக செல்வதை இந்த பாசிட்டிவிட்டி டாட்டூ உணர்த்துவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.