நயன்தாரா & நயன்தாரா நடிக்கும்’டெஸ்ட்’ படம் ஓடிடியில் நேரடி ரிலீஸா?
நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்களில் ஜவான் தவிர எந்த படமும் வெற்றிப் படமாக அமையவில்லை. இந்நிலையில் அவர், ஒய்நாட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் டெஸ்ட் என்ற படத்தில் சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் மாதவன் ஆகியோருடன் நடித்துள்ளார்.
இந்த படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதைக்களம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சில முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஷூட்டிங் முடிந்தும் இன்னும் இந்த படத்தின் ரிலீஸ் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளரும் இயக்குனருமான சசிகாந்த் முயற்சிகள் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக எந்த ஓடிடி நிறுவனமும் திரைப்படங்களை நேரடி ரிலீஸ் செய்யாமல் இருந்த நிலையில் சசிகாந்தின் இந்த முயற்சி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.