ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (11:59 IST)

'சித்தம்மா'வாக நயன்தாரா -சயீரா நரசிம்மரெட்டி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி `சயீரா நரசிம்மரெட்டி’ படத்தில் அவரது கேரக்டரின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.  தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவுக்கு பிறந்த நாள் பரிசாக இன்று 'கொலையுதிர் காலம்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியது. 
 
இந்நிலையில் சிரஞ்சீவியின் வரலாற்று படமான `சயீரா நரசிம்மரெட்டி’  படத்தில் அவருக்கு ஜோடியாக சித்தம்மா என்ற கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார்.  ரேஸ் குர்ராம், துருவா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண், பல கோடி செலவில் தயாரித்து வருகிறார். 
 
நயன்தாராவுடன் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, தமன்னா, `நான் ஈ' சுதீப் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், உள்பட பலரும் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம்  உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் படம் தயாராகி வருகிறது.