புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (11:51 IST)

நயன்தாராவுக்கு சூப்பரான பிறந்த நாள் பரிசு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தல அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்தியன் 2, தளபதி 63 ஆகிய படங்களில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம்.

பல வருடங்களாக தமிழ் சினிமாவின் டாப் நடிகையை தொடர்ந்து வரும் நயன்தாரா, கதாநாயகனுடன் டுயிட் பாடும் நாயகியாக மட்டும் இல்லாமல் கதை நாயகியாக  நடித்தார். அப்படி நடித்த நயன்தாராவின் சமீபத்திய பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. இதன் மூலம் தனக்கென பெரிய மார்க்கெட்டை நயன்தாரா உருவாக்கி உள்ளார்.
 
 இந்நிலையில் நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள் பரிசாக அவர் நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 
 
 
இப்படத்தை 'உன்னைப்போல் ஒருவன்', 'பில்லா 2' படங்களை இயக்கிய சாக்ரி டோலடி இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க இங்கிலாந்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 
 
 
பாலிவுட்டின்  பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் யுஎஸ்ஆர் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்தது.
 
 
இந்நிலையில்  படத்தின் இணைத் தயாரிப்பாளரான யுவன் சங்கர் ராஜாவின் ஒ எஸ் ஆர் பிலிம்ஸ் வெளியேற்றப்பட்டு தற்போது, 'செம போத ஆகாதே' படத்தை விநியோகம் செய்த எட்சட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது. இன்னும்  5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதால் கொலையுதிர் காலம் படத்தை 2019ம் ஆண்டு ஜனவரி மாதம்  வெளியிட முடிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் வெளியாக உள்ள நிலையில் நயன்தாராவின் படமும் வெளியாக உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நயன்தாராவுக்கு இந்த ஆண்டு பிறந்த நாள் பரிசாக  கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்கள் மெகா ஹிட்டாகியது குறிப்பிடத்தக்கது.