வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 18 நவம்பர் 2018 (17:37 IST)

கிருஸ்துமஸ் விடுமுறையில் சந்திக்கும் விஜய்சேதுபதி, தனுஷ், நயன்தாரா, சிவகார்த்திக்கேயன்!

வரும் டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் பணிடிகையை முன்னிட்டு ரிலிசாகப் பலப் படங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அந்த வரிசையில் லேட்ட்ஸ்ட்டாக சிவகார்த்திக்கேயன் தயாரித்துள்ள கனாப் படமும் இணையவிருக்கிறது.

நவம்பர் மாதத்தின் முதல் 2 வாரங்களையும் விஜய்யின் சர்கார் படமும், நவம்பர் இறுதிவாரம் மற்றும் டிசம்பர் முதல் இரண்டு வாரங்களை ரஜினியின் 2.0 திரைப்படமும் வெளியாகி மொத்த திரையரங்குகளையும் கைப்பற்றி விட்டதால் மற்ற சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள் தங்கள் பட ரிலிஸை டிசம்பர் இறுதிக்குத் தள்ளி வைத்துள்ளனர்.

இதனால் தனுஷின் மாரி, விஜய் சேதுபதியின் சீதக்காதி மற்றும் நயன்தாரா நடித்துள்ள ஐரா அகிய படங்கள் ரிலிஸாவதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் தற்போது சிவக்கார்த்திக்கேயன் தயாரித்துள்ள கனா திரைப்படமும் இணைந்துள்ளது. சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட இந்தப் படம் யூ சான்றிதழ் பெற்று அனைவரும் பார்க்கும் குடும்பப் படமாக உருவாகியுள்ளது.