1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2019 (20:43 IST)

ரஜினி, விஜய்க்காக கொள்கையை தளர்த்தி கொண்ட நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும்போது அந்த படத்தின் புரமோஷன் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுவது வழக்கம். ஆனால் நடிகை நயன்தாரா மட்டும் எந்த பிரமோஷன் விழாவுக்கும் வரமுடியாது என்று நிபந்தனை செய்து கொண்ட பின்னரே ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்வார். நயன்தாராவின் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு தான் அவரை படத்தில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே 
 
 
நயன்தாராவுக்கு சம்பளமாக கிட்டத்தட்ட 5 கோடி கொடுக்கப்பட்டும் அவர் எந்த படத்திற்கும் புரமோஷன் விழாவுக்கு செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவருக்கு நல்ல பெயர் தந்த மாயா, அறம், கோலமாவு கோகிலா உள்பட ஒரு சில படங்களுக்கு கூட அவர் புரமோஷன் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த நிலையில் விஜய் நடித்த ’பிகில் படத்தில் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி ரஜினியுடன் அவர் நடத்தி வரும் தர்பார் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவர் ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் ரஜினி மற்றும் விஜய்க்காக மட்டும் தனது கொள்கையை தளர்த்திக் கொண்டதாகவும் மற்ற படத்திற்கு அவர் கண்டிப்பாக புரோமோஷன் செய்ய வரமாட்டார் என்று அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது