புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (08:56 IST)

நயன்தாரா இதுவரை நடிக்காத கேரக்டர்: ‘நெற்றிக்கண்’ குறித்த புதிய அப்டேட்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதும், அந்தப் படத்துக்கு ’நெற்றிக்கண்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பதும் தெரிந்தது
 
 
இந்த நிலையில் ’நெற்றிக்கண்’ திரைப்படத்தில் நயன்தாரா இதுவரை நடித்திராத பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இந்த படம் கொரிய மொழியில் வெளியான ‘பிளைன்ட்’ என்ற படத்தின் ரீமேக் என்றும் இந்த படத்தில் பார்வையற்றவராக நடிக்கும் நயன்தாரா புத்திசாலித்தனமாக ஒரு கொலையை துப்பறிந்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் பெண்ணாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 
விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் மற்றும் கிராஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைக்கின்றார். ஏற்கனவே ’அவள்’ என்ற திகில் படத்தை இயக்கிய மிலந்த் ராவ் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவும் லாரன்ஸ் கிஷோர் என்பவர் படத்தொகுப்பும் செய்ய உள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று அதிகாரபூர்வமாக ஆரம்பித்ததை அடுத்து குறுகிய கால தயாரிப்பாக இந்தப்படத்தை இயக்கவிருப்பதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் மிலந்த் ராவ் தெரிவித்துள்ளார்.