திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (16:42 IST)

ஷாருக் கான் படத்தின் வாய்ப்பை மறுத்த நயன்தாரா… இதுதான் காரணமா?

நடிகர் ஷாருக் கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்க நயன்தாராவை அனுகிய போது அவர் மறுத்து விட்டாராம்.

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார். அவரின் படங்கள் தமிழில் பல கோடி ரூபாய் வரை வசுலித்து வருவதால் தமிழில் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸான அவரின் மூக்குத்தி அம்மன் திரைப்பட வெற்றியும் பிறந்தநாள் கொண்டாட்டமும் அவரை மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன.

 ஆரம்ப காலங்களில் கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து வந்த நயன்தாரா இப்போது எல்லாம் தன் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பில்  வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நயன்தாராவை அழைத்துள்ளனர்.

ஆனால் அந்த பாடலை வடிவமைக்க இருந்தது பிரபுதேவா என்பதால் அந்த வாய்ப்பை அவர் மறுக்க பின்னர் பிரியாமனி அந்த பாடலுக்கு ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.