1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (17:55 IST)

பேசுன காச கொடுங்க... தர்பார் பட ஷூட்டிங்கை புறக்கணித்தாரா நயன்தாரா?

தர்பார் படத்திற்கு பேசப்பட்ட சம்பளம் முழுமையாக கொடுக்கப்படாததால் நடிகை நயன்தாரா படபிடிப்பை புறக்கணித்தாராம். 
 
பேட்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி, முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்தார். தர்பார் படத்தில் ரஜினியோடு நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தனர். 
 
இந்நிலையில் நயன்தாரா, தனக்கு பேசப்பட்ட சம்பளம் முழுமையாக தரப்படாததால் கடைசி நாள் ஷூட்டிங்கிற்கு வரவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் தயாரிப்பாளர் தரப்பில் அவகாசம் கேட்டு உறுதியளித்த பின்னர்தான் படத்தை நடித்து முடித்து கொடுத்தாராம். 
ஒரு படத்தில் ஒப்பந்தமாகும் போது பாதி தொகையையும், மீத தொகையை டப்பிங் சமயத்திலும் தயாரிப்பாளர்கள் வழங்குவார்கள். ஆனால், நயன்தாராவிற்கு வேறு ஒருவர் டப்பிங் செய்வதால் கடைசி நாள் ஷூட்டிங்ன் போது முழு சம்பளத்தையும் நயன்தாரா பெற்றுக்கொள்வது வழக்கமாம்.