வெறித்தனமான வெய்ட்டிங்கில் இருந்த ரசிகர்களை சூடேற்றி விட்ட "பிகில்" புதிய போஸ்டர்!

Papiksha| Last Updated: திங்கள், 16 செப்டம்பர் 2019 (13:13 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய் தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படம் பிகில் படத்தில் நடித்து வருகிறார். 


 
இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார்.  பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. 
 
சமீபத்தில் வெளியான சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என்ற இரண்டு பாடல்களும் இணையத்தில் மெகா சாதனை படைத்தது. இதையடுத்து பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 19-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும், செப்டம்பர் 22-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போது ஆடியோ லாஞ்சிற்காக  உருவாக்கப்பட்டிருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் பந்தை கையில் சுழற்றி பறக்கவிடுவது போன்று மாஸாக இருக்கும் இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :