புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (14:28 IST)

ரஜினியின் நெற்றிக்கண் இப்போது நயன்தாரா படத்தலைப்பு – தயாரிப்பாளர் ஆகும் விக்னேஷ் சிவன் !

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்துக்கு நெற்றிக்கண் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் தற்போது பிகில் மற்றும் தர்பார் படங்கள் உருவாகி விரைவில் வெளியாக இருக்கின்றன. இதையடுத்து அவர் நடிக்கும் அவர் நடிக்கும் படத்தை ரவுடி பிக்சர்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்க இருக்கிறார்.

மிலிண்ட் ராவ் கதை, வசனம், எழுதி, இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்நிலையில் இப்படத்துக்கு நெற்றிக்கண் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பு ரஜினிகாந்த் நடித்த பல வருடங்களுக்கு முன் வெளியாக சூப்பர்ஹிட் படத்தின் தலைப்பாகும். இந்த தலைப்பை கொடுத்ததற்காக நயன்தாரா கவிதாலயா நிறுவனத்துக்கு நன்றி சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளார்.