வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (11:49 IST)

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் நயந்தாராவின் நெற்றிக்கண்!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான நெற்றிக்கண் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் முழுவதும் தயாராகி ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால் படத்தை வெளியிடுவதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில் இந்த படத்தை ஓடிடி மூலமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி விரைவில் நெற்றிக்கண் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.