திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 நவம்பர் 2024 (15:22 IST)

ஓவர் பில்டப்பா இருக்கே… நயன்தாரா திருமண வீடியோவின் டிரைலர் எப்படி?

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டனர். இந்த திருமணத்துக்குப் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படவில்லை.

இதனால் அந்த திருமண வீடியோ முன்னணி ஓடிடியான நெட்பிளிக்ஸில் வெளியாகும் என சொல்லப்படது. இதற்காக நெட்பிளிக்ஸ் தளம் ஒன்று பெரும் தொகை ஒன்றை நயன்தாரா தம்பதிகளுக்கு கொடுத்ததாக தகவல்கள் பரவின. இதையடுத்து திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் கழித்து நவம்பர் 18 ஆம் தேதி ‘“Nayanthara: Beyond fairy tales” எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோ வெளியாகவுள்ளது.

இதையடுத்து இன்று அதன் டிரைலர் ரிலீஸாகியுள்ளது. அதில் நயன்தாராவுடன் பணியாற்றிய கலைஞர்கள் அனைவரும் அவரை வானளாவப் புகழ்ந்து பேசியுள்ளனர். வார்த்தைக்கு வார்த்தை அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என புகழ, அவரது திருமணத்துக்கு சம்மந்தமே இல்லாத அவரின் படக் காட்சிகள் எல்லாம் டிரைலரில் இடம்பெற்றுள்ளன. இடையிடையே நயன்தாரா தன்னுடைய சினிமா வாழ்க்கையின் உயர்வு தாழ்வுகள் பற்றி பேசுகிறார்.