1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : புதன், 9 அக்டோபர் 2024 (12:21 IST)

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரிலீஸ் தாமதத்துக்கு தனுஷும் ஒரு காரணம?

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டனர். இந்த திருமணத்துக்குப் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படவில்லை. அதுபோல கலந்துகொண்ட பிரபலங்களுக்கும் செல்போன் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் அந்த திருமண வீடியோ முன்னணி ஓடிடியான நெட்பிளிக்ஸில் வெளியாகும் என சொல்லப்படது. இதற்காக நெட்பிளிக்ஸ் தளம் ஒன்று பெரும் தொகை ஒன்றை நயன்தாரா தம்பதிகளுக்கு கொடுத்ததாக தகவல்கள் பரவின. ஆனால் திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அந்த வீடியோ வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ், விரைவில் 81 நிமிட வீடியோ வெளியாகுமென அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த தாமதத்துக்கு தனுஷும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் அந்த வீடியோவில் தனுஷ் தயாரித்த “நானும் ரௌடிதான்” படத்தில் இருந்து சில காட்சிகளை பயன்படுத்த அவர் அனுமதி தரவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோவில் நயன்தாராவின் பேட்டி,  திருமணத்துக்கு வந்த பிரபலங்களின் வாழ்த்துகள் ஆகியவை இடம்பெறும் என சொல்லப்படுகிறது.