புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (20:35 IST)

ஹாய் ஆண்ட்டி: நயன்தாரா வெளியிட்ட புகைப்படத்தை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும். நயன்தாரா வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து விட்டார். 


 
உச்ச நடிகர்களுக்கு போட்டியாக வளர்ந்து வரும் நயன்தாரா தற்போது தர்பார் படத்தில் நடித்துவருகிறார். இயக்குனர்களின் ராசியான நடிகையாகவும் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன்  நடிகையாகவும்  வலம் வரும் நயன் மற்ற நடிகைகளை விட அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்து வருகிறார். 
 
இதற்கிடையில் அடிக்கடி தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அவுட்டிங் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வந்த நயன்தாரா தற்போது சிங்கிள் போட்டோ ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் சிலர் கிழவி என்றும் ஆண்டி என்று கிண்டலித்து வருகின்றனர்.