விஜய், சூர்யாவுடன் மோத நயன்தாராவுடன் கூட்டு சேர்ந்த விஷால்
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்திலும், சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம் வரும் பொங்கல் தினத்திலும் வெளியாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதே தீபாவளி மற்றும் பொங்கல் தினத்தில் நயன்தாரா நடித்த படமும், விஷால் நடித்த படமும் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
'மெர்சல்' வெளியாகும் தீபாவளி தினத்தில் விஷால் வில்லனாக நடித்த 'வில்லன்' திரைப்படமும், நயன்தாரா நடித்த 'அறம்' படமும் வெளியாகவுள்ளது. அதேபோல் 'தானா சேர்ந்த கூட்டம்' வெளியாகும் பொங்கல் தினத்தில் நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' படமும் விஷாலின் 'இரும்புத்திரை' படமும் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
விஜய் மற்றும் சூர்யா படங்கள் வெளியாகும் தேதியில் நயன்தாரா மற்றும் விஷால் படங்கள் வெளியாவது தற்செயலா? அல்லது திட்டமிடலா? என்பது குறித்து கோலிவுட்டில் மிகவும் சூடான விவாதம் நடந்து வருகிறது.