வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2017 (18:14 IST)

தெலுங்கில் அதிகம் தொகைக்கு விற்கப்படும் மெர்சல்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து தீபாவளிக்கு வெளிவரும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

 
விஜய்-அட்லியின் கூட்டணி இரண்டாவது முறையாக இணைவதால் ‘மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான  எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே பாடல்கள், டீசர் என அனைத்தும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்நிலையில் விஜய்க்கு இதுவரை தெலுங்கில் பெரிய வெற்றி இல்லாத நிலையில், மெர்சலில் எப்படியும் தெலுங்கு மார்க்கெட்டையும் பிடிக்க வேண்டும் என களத்தில் குதித்துள்ளனர். அதனால் மெர்சல் படத்தின் தெலுங்கு டப்பிங் எப்படியும் ரூ. 8 கோடிக்களுக்கு மேல் விற்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான விஜய் படங்களிலேயே  தெலுங்கில் அதிகம் தொகைக்கு விற்கப்படும் படம் மெர்சல் என்றும், அதற்கான விளம்பரப்படுத்தும் வேலைகள் தற்போதே  ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.