1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (20:15 IST)

சூர்யா அரசியலுக்கு வர வேண்டும்: பிரபல தமிழ் இயக்குனர்

நீட் தேர்வு குறித்து சூர்யாவின் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் கல்வி அமைச்சராக வேண்டும் என்றும் நடிகர் சௌந்தரராஜா அளித்த பேட்டியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது மூடர் கூடம் படத்தை இயக்கிய இயக்குநர் நவீன் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யா மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்று பதிவு செய்து உள்ளார். சூர்யா போன்ற சமூக அக்கறை உள்ளவர்கள் மக்கள் பிரதிநிதி ஆனால் தான் இந்த நாடு நல்ல நிலைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியதாவது: இப்படி ஒரு அரசியல் சமூக உளவியல் தெளிவு நிறைந்த ஒரு கருத்தை சமீபத்தில் நான் வாசிக்கவில்லை. ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த நிதானித்த யோசனைக்குப்பின் பொறிக்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். மக்களுக்காக குரல் கொடுப்பவரே மக்கள் பிரதிநிதியாக நிற்க முடியும்