1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (10:01 IST)

நவரசா ஆந்தாலஜி படத்தின் தலைப்புகள் அறிவிப்பு!

9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தத் தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார் என்பதும் இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூர்யா கௌதம் மேனன் படத்தின் தலைப்பு கிடார் கம்பி மேலே நின்று என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது மேலும் 3 படங்களின் தலைப்பு வெளியாகியுள்ளது. தைரியம் என்ற ரசத்தில் உருவாகியுள்ள துணிந்த பின் படத்தில் அதர்வா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதே போல பயம் என்ற ரசத்தில் உருவாகும் இன்மை என்ற படத்தில் சித்தார்த் மற்றும் பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். கருணை என்ற ரசத்தில் உருவாகும் எதிரி என்ற படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.