1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 21 ஜூன் 2018 (19:43 IST)

அஜித் படத்தலைப்பில் நட்டி நட்ராஜ்

அஜித் படத்துக்கு வைக்க இருந்த ‘காட்பாதர்’ தலைப்பில் நடித்து வருகிறார் நட்ராஜ் சுப்ரமணியம்.

 
இயக்குநர் நலன் குமாரசாமியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஜெகன் ராஜசேகர். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில், நட்டி என்கிற நட்ராஜ் சுப்ரமணியம் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘இறைவி’ படத்தில் நடித்த பூஜா தேவரியா நடிக்கிறார். மலையாள நடிகரான லால், வில்லன் கேரக்டரில் நடிக்கிறார்.
 
இந்தப் படத்துக்கு ‘காட்பாதர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த படத்துக்கு வைக்கப்பட்டத் தலைப்பாகும். ஆனால், தமிழில் பெயர் வைத்தால்தான் வரிவிலக்கு என தமிழக அரசு கூற, காட்பாதருக்குப் பதில் ‘வரலாறு’ எனத் தலைப்பு வைத்தனர்.
அஜித் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், அசின், கனிகா, சுஜாதா, பொன்னம்பலம், ராஜேஷ், ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 2006ஆம் ஆண்டு 
 
அக்டோபர் மாதம் 20ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸானது.