1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 6 ஜூன் 2018 (21:00 IST)

தல அஜித் வைத்திருக்கும் போன் மாடல்? டான்ஸ் மாஸ்டர் கூறும் ஆச்சரிய தகவல்

தல அஜித் நடிகர் என்பதையும் தாண்டி அவர் மிகச்சிறந்த மனிதர், எளிமையானவர் என்பதாலே அவரை பலருக்கு பிடிக்கும். குறிப்பாக திரையுலகினர் அவரை பற்றி இரண்டு வார்த்தை கூறினால் அதில் ஒரு வார்த்தை எளிமை என்பது கட்டாயம் இருக்கும்
 
இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த டான்ஸ் மாஸ்டர் பிருந்தா தல அஜித்தின் எளிமை குறித்து கூறியுள்ளார். தற்போது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே ஐபோன் முதல் விலையுயர்ந்த போன்கள் வைத்திருக்கும் நிலையில் அஜித் இன்னும் பழைய நோக்கியா மாடல் போனை வைத்திருப்பதாக தெரிவித்தார். தல அளவுக்கு ஒரு எளிமையான மனிதரை தான் இதுவரை வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்று பிருந்தா கூறியுள்ளார்.
 
மேலும் தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தில் தான் இரண்டு பாடல்களுக்கு நடனப்பயிற்சி செய்வதாகவும், அவர் ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனமாக பார்த்து ஆடிய பின்னர், தான் ஆடியது சரிதானா? அல்லது இன்னொரு ஆடட்டுமா? என்று கேட்கும்போது தான் அசந்துவிட்டதாகவும் பிருந்தா கூறியுள்ளார்.
 
அஜித், நயன்தாரா, யோகிபாபு,  ரோபோசங்கர் உள்பட பலர் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.