1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 30 மே 2018 (20:26 IST)

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இணையும் ரஜினி பட நடிகை?

காலா படத்தில் நடித்த சாக்‌ஷி அகர்வால் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மற்றொரு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகிவரும் படம் ‘விசுவாசம்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் கடந்த 7ஆம் தேதி தொடங்கி அஜித்தின் வயதான கதாபாத்திரத்துக்கு படப்பிடிப்பு நடந்தது.
 
இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், அதில் வயதான கதாபாத்திரத்துக்கு நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியானது.
 
இந்நிலையில் அஜித் இளமை தோற்றத்துக்கு மாறி நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்துக்கு சாக்‌ஷி அகர்வால் ஜோடியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் தற்போது காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருக்கிறார்.