ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:33 IST)

நயன்தாராவுக்கு வாழ்த்து கூறிய யார்க்கர் நடராஜன்: வைரலாகும் வீடியோ

natarjan mookuthi
தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் நடராஜன் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு தேர்வானதை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது நடராஜன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ’ஆர்ஜே பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படத்தை பார்ப்பதற்காக நானும் எனது குடும்பத்தினரும் எனது ஊர் மக்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றோம் என்றும் குறிப்பாக ஆர்ஜே பாலாஜி அவர்களின் கிரிகெட் கமெண்டரியை எங்கள் ஊர் பொதுமக்கள் மிகவும் ரசித்தார்கள் என்றும் அதற்காகவே அந்த படத்தை பார்க்க அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் நடராஜன் அந்த வீடியோவில் கூறியுள்ளார் 
 
இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், ஆர்ஜே பாலாஜியின் புரமோஷின் தந்திரங்களில் இதுவும் ஒன்றா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.