செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2020 (07:48 IST)

ரஜினிக்காக வருத்தம் தெரிவித்த ஆர்ஜே பாலாஜி: மூக்குத்தி அம்மன் புரமோஷனா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து தான் கூறிய ஒரு கருத்து  தவறு என்றும் தான் அவ்வாறு பேசியிருக்க கூடாது என்றும் மூக்குத்தி அம்மன் புரமோஷனில் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார் 
 
மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ள ஆர்ஜே பாலாஜி அந்த படத்தை வரும் 14ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளார். இதற்கான புரமோஷன் பணிகளையும் அவர் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று டுவிட்டரில் அவர் ரசிகர்களுடன் உரையாடினார் மூக்குத்தி அம்மன் படம் உள்பட எந்த கேள்வி கேட்டாலும் அவர் பதிலளித்து வந்தார். அந்த வகையில் ரஜினிகாந்த் குறித்து கருத்து சொல்லுங்கள் என ஒரு ரசிகர் கேட்ட போது ’மிக மிக எளிமையான ஒரு மனிதர் என்றும், சிறுவயதில் தான் பார்த்து வியந்த மனிதர் என்றும், தான் நான்காவது படித்துக் கொண்டிருக்கும் போது எனது தாத்தா என்னிடம் ’ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர்’ என்று கூறினார் என்றும் அது என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.
 
மேலும் தளபதி முதல் தர்பார் வரை அவருடைய படங்களை நான் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறேன் என்றும், நான் அவரது மிகப்பெரிய மிகப்பெரிய ரசிகன் என்றும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை பேட்டிகள் தெரிவித்தேன் என்றும், அதன் பின்னர் அந்த பேட்டியை நான் பார்த்தபோது இந்த கருத்து தெரிவித்ததற்கு நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன் என்று கூறியுள்ளார்