செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (12:05 IST)

ரிலீசாகும் முன்பே ரீமேக்: விஜய்சேதுபதியின் 96 அப்டேட்

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அக்டோபர் 4-ந்தேதி வெளியாக இருக்கும் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நானி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் ரிலீசுக்குத் தயாராக உள்ளது 96. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படத்தின் ‘காதலே காதலே’ பாடல் தற்போதே இளைஞர்களின் ரிங்டோனாக மாறியுள்ளது.

பள்ளியில் காதலித்து பிரிந்த இருவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் சந்தித்துக் கொள்ளும் போது அவர்களின் கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்கும் நாஸ்டால்ஜியா படமாக உருவாகியிருகிறது, 96. இந்த படத்தில் விஜய் சேதுபதி போட்டோகிராஃபராக இரு தோற்றங்களில் நடித்துள்ளார். காட்சி அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப் பட்டுள்ள இப்படம் அடுத்தவாரம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ரிலீசாகும் முன்பே இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை விற்கப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இதன் தெலுங்கு உரிமையை வாங்கியுள்ளார் என கடந்த சில தினங்களுக்கு முன்னால் செய்திகள் வெளியாகின. இப்போது இப்படத்தின் தெலுங்கு நடிகர் நானியும் கதாநாயகியாக சம்ந்தாவும் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.