1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (19:34 IST)

ஒரே நாளில் வெளியாகும் 7 திரைப்படங்கள்! தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல்

புதிய படங்களை திரையிடுவதில் தமிழ் சினிமாவில் ஒழுங்கற்ற நிலை காணப்படுகிறது. பெரிய படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் சிறுபட்ஜெட் படங்களை வெளியிடுவதில் சிரமங்கள் ஏற்படுகிறது. 

சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் முடங்கி வருகின்றன. இந்த குளறுபடிகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில்  படங்களை வெளியிடுவதில் புதிய வரைமுறைகளை வகுத்தது.
 
ஒவ்வொரு படத்துக்கும் சங்கமே தேதிகளை வெளியீட்டு ஒதுக்கி கொடுத்தது. இதன்படி
வாரத்துக்கு 2, 3 படங்கள் திரைக்கு வந்தன.
 
இந்த நிலையில் அடுத்த வாரம் 5–ந் தேதி சமுத்திரக்கனியின் ஆண்தேவதை, ஜெய் நடித்துள்ள ஜருகண்டி, விஷ்ணுவிஷால் நடித்துள்ள ராட்சசன், உதயா நடித்துள்ள
உத்தரவு மகாராஜா, விவேக்கின் எழுமின் ஆகிய 5 படங்களையும் திரைக்கு கொண்டுவர
அனுமதி வழங்கி அவற்றுக்கு தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் விஜய்சேதுபதி–திரிஷா நடித்துள்ள ‘96’, விஜய்தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ ஆகிய படங்களும் 5–ந் தேதி திரைக்கு வருவதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த இரண்டும் பெரிய படங்கள் என்பதால் மற்ற 5 படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் அவற்றை தள்ளிவைக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், புகார் அளித்துள்ளார்கள்.